Ajith photos

Sunday, October 31, 2010

Thala Biryani to Mankatha team

அஜித்தின் 50வது படமான மங்‌காத்தா சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் மங்காத்தா குழுவினருக்கு பிரியாணி விருந்து படைத்து அசத்தியிருக்கிறார் அஜித். மே மாதம் 1ம்தேதி அஜித்தின் பிறந்த நாளில் வெளியிடும் திட்டத்துடன் மங்காத்தா படம் வளர்ந்து வருகிறது. டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை தயாநிதி அழகிரி தயாரிக்கிறார். இந்த படத்திற்காக காலை, மாலை என கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உடலை சிக்கென ஆக்கியிருக்கும் அஜித் சூட்டிங் ஸ்பாட்டில் ‌ரொம்பவே ஆக்டிவ்வாக இருக்கிறாராம்.

கார் ஓட்டுவதில் மட்டுமல்லாமல், சமையல் கலையிலும் கைதேர்ந்தவரான அஜித் சமீபத்தில் மங்காத்தா குழுவினருக்காக ஸ்பெஷல் பிரியாணி விருந்து படைத்திருக்கிறார். அந்த விருந்தில் அப்படியென்ன ஸபெஷல் என்கிறீர்களா? பிரியாணி அஜித்தின் கைப்பக்குவத்தில் உருவானதுதான் ஸ்‌பெஷல். இதுபற்றி டைரக்டர் வெங்கட்பிரபு தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். எல்லோரும் தலப்பாகட்டு பிரியாணி சாப்பிட்டிருப்பாங்க. நாங்க தல பிரியாணி சாப்பிட்டோம், என்று கூறியிருக்கிறார் வெங்கட்.

No comments:

Post a Comment